1,200 கி.மீ சைக்கிள் ஓட்டிய 15 வயது சிறுமிக்கு இவான்கா டிரம்ப் பாராட்டு

அரியானாவின் குர்கோவான் நகரிலிருந்து காயமடைந்த தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து 15 வயதான சிறுமி ஜோதி குமாரி 1,200 கி.மீ 10 நாட்களில் சொந்த மாநிலமான பீகாருக்கு அழைத்து வந்து பிரமி்ப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனை ஏற்கனவே நாம் செய்தியில் பார்த்தோம்.

ஜோதி குமாரி சைக்கிள் ஓட்டும் திறமை குறித்து அறிந்த தேசிய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், லாக்டவுன் முடிந்தபின் அவரை டெல்லிக்கு பயிற்சிக்காக அழைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் மற்றும் ஆலோசகர் இவான்கா டிரம்ப் ஜோதி குமாரியின் செயலை பாராட்டி உள்ளார். அவர் தனது டுவிட்டில் கூறி இருப்பதாவது:-

15 வயது ஜோதி குமாரி, தனது காயமடைந்த தந்தையை 7 நாட்களில் +1,200 கி.மீ தூரம் தனது சைக்கிளின் பின்புறத்தில் வைத்து தங்கள் சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார். சகிப்புத்தன்மை மற்றும் அன்பின் இந்த அழகான சாதனை இந்திய மக்களின் கற்பனையையும் சைக்கிள் கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது என கூறி உள்ளார்.