மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய பயனாளிகளை இணைக்க அக்டொபரில் 100 சிறப்பு முகாம் .அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை:வருகிற அக்.10ல் சிறப்பு முகாம் ...அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இதையடுத்து அப்போது பேசிய அவர், அகில இந்திய அளவில் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பிரதம மந்திரி ஆயுஷ்மான் திட்டத்தில் தமிழகத்தில் 2018-க்கு பிறகு 86.50 லட்சம் பேர் இணைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

மேலும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய பயனாளிகளை இணைக்க அக்டொபரில் 100 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு மத்திய அரசு 60% மாநில அரசு 40% நிதி வழங்குகிறது. 1829 மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டு வருகிறது.


கடந்த 2008-லிருந்து 1726 பேர் உறுப்பு தானம் செய்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து 6,327 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 313 பேர் உறுப்பு தானம் செய்து உள்ளதாகவும், 1640 உறுப்புகள் அவர்களிடமிருந்து தானமாக பெறப்பட்டது.

தமிழகம் மருத்துவ கட்டமைப்பில், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமான மாநிலமாக இருக்கிறது. குழந்தையின் பாலினம் கண்டுபிடித்து கூறப்படுவது தெரியவந்தால், நிச்சயமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.