அரசியல் நோக்கத்தோடு கொரோனா பற்றி தவறான தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்புக் குறித்து அரசியல் நோக்கத்தோடு தவறான தகவல்களைத் தெரிவிக்கின்றன. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த பல ஆண்டுகள் தேவைப்படும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை மருத்துவர் மைக்கேல் ரேயான் தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2.71 கோடியை எட்டியுள்ளது. இதுவரை, 8.88 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையவில்லை.

இதில் அமெரிக்கா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் இந்தியாவும், 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் தலைமை மருத்துவர் மைக்கேல் ரேயான் தெரிவித்துள்ளதாவது:

பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்புக் குறித்து அரசியல் நோக்கத்தோடு தவறான தகவல்களைத் தெரிவிக்கின்றன. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த பல ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் சில வினாடிகளில் நம்பிக்கையை குலைக்க முடியும்.
அரசியல் நோக்கத்தோடு திரிக்கப்படும் தகவல்களைத்தான் நாம் பெறுகிறோம் அல்லது ஆதாரங்களை சிதைக்கும் வகையில் செயல்படுகிறார்கள் என்பதை மக்கள் உணர்ந்தால், துரதிர்ஷ்டவசமாக பெரும் குழப்பத்துக்கு வழிவகுக்கும்.
தவறான தகவல்களை பரப்பும் அரசுகள் அரசியல் பின்னடைவை எதிர்கொள்ளக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.