ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகையை பதிவு செய்ய புதிய செயலி

சென்னை: தமிழகத்தில் எம்மிஸ் இணையதளம் வாயிலாக பள்ளிகளில் மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் ஆசிரியர்களின் விவரங்களையும் வருகையையும் இந்த இணையத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் TNSED என்ற புதிய செயலியை பள்ளிக்கல்வித்துறை அறிமுகபடுத்தியுள்ளது. இது மாணவர்கள் ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு செயலியாகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிறவற்றை எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாக சமர்ப்பித்து வந்தனர்.

இதை அடுத்து இம்முறையில் ஆசிரியர்கள் பல சிரமங்களை சந்தித்து வந்தனர். மேலும் கால வியரமும் அதிகரித்தது. இதை தவிர்க்கும் வகையில் TNSED செயலி கொண்டு வரப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் நாளை (01.08.2022) முதல் ஆசிரியர்களுக்கான செயலி வருகை பதிவு அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் இனி வரும் களங்களில் ஆசிரியர்கள், பள்ளி தலைமை,ஆசிரியர்கள் என அனைவரும் இந்த TNSED செயலி மூலம் தங்கள் பணி சார்ந்த தேவைகள் விடுப்புகளுக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது உள்ளது. இது குறித்து பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தபட வேண்டும் என தெரிவித்துள்ளது.