கனடாவில் பணவீக்க வீதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு

கனடா: பணவீக்க வீதத்தில் மாற்றம்... கனடாவில் பணவீக்க வீதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நாட்டின் வருடாந்த பணவீக்க வீதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது என புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுகர்வோர் விலைச்சுட்டி குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. எரிவாயு விலை வீழ்ச்சி காரணமாக பணவீக்கம் குறைவடைந்துள்ளது.

எவ்வாறெனினும், ஈட்டுக் கடன் வட்டி, ஆடைகள், பாதணிகள் போன்றவற்றுக்கான விலைகள் உயர்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் மாதம் 6.8 வீதமாக காணப்பட்ட பணவீக்கம், டிசம்பர் மாதம் 6.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதமும் மளிகைப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்த போதிலும், அவை கடந்த மாதங்களை விடவும் குறைந்த வேகத்தில் அதிகரித்துள்ளன. கடந்த 2022ம் ஆண்டுக்கான சராசரி பணவீக்க வீதம் 6.8 வீதம் என புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.