ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவுத்துறை முக்கிய உத்தரவு ஒன்று வெளியீடு

சென்னை: மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி கொண்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) கருவிகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன.

இதனையடுத்து இது குறித்த தமிழக கூட்டுறவுத்துறை முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த புதிய வசதி மூலம் ரேஷன் கடைகளில் போடப்படும் எடைகளில் உள்ள குளறுபடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த இயந்திரங்கள் ஆஃப்லைன்+ ஆன்லைன் என 2 முறையிலும் வேலை செய்யும். இந்த வசதி மூலம் ரேஷன் பொருள்களை நாட்டில் உள்ள எந்த நியாயவிலை கடையிலிருந்தும் பெற முடியும்.

மேலும் ரேஷன் கடைகளில் நடக்கும் விற்பனையை அதிகாரிகள் எங்கிருந்தும் பார்க்கலாம். அதனால் பல மோசடிகள் தவிர்க்கப்பட்டு, வருமானம் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.