கேரளாவில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை

கேரளா: நாட்டில் வடஇந்திய பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதையடுத்து டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இமாச்சல் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் ஆங்காங்கே போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, தெலங்கானா என பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை நீடித்து கொண்டு வருகிறது.

மழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேரள மாநிலத்தில் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கைடும், மேலும், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, திரிச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

எனவே இதனையொட்டி கண்ணூர், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. தேர்வில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.