முடியலை... விமான எரிபொருள் கட்டணத்தை கட்ட முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் அரசு நிறுவனமான பிஐஏ ,நஷ்டம் காரணமாக பாகிஸ்தான் எண்ணெய் நிறுவனங்களுக்கு எரிபொருள் பில்களைக் கட்ட முடியாமல் தடுமாறுகிறது.

எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எரிபொருள் வாங்குவதற்கான நிதி ஆதாரம் வற்றியதால், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் தினமும் டஜன் கணக்கான சர்வதேச விமானங்களை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அரசு நிறுவனமான பிஐஏ ,நஷ்டம் காரணமாக பாகிஸ்தான் எண்ணெய் நிறுவனங்களுக்கு எரிபொருள் பில்களைக் கட்ட முடியாமல் தடுமாறுகிறது. கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமையில் 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிதி நெருக்கடியைத் தவிர்க்க பி.ஐ,ஏ அரசு நிறுவனத்தை தனியாருக்கு கொடுக்க ஆலோசித்து வருவதாக பாகிஸ்தான் இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.