ஆழ்கடலில் நிறுத்தப்பட்ட ஹெலிாகாப்டர் ஒன்றின் புகைப்படம் வைரல் - உண்மை பின்னணி என்ன ?

தற்போது சமூக வலைதளங்களில் ஆழ்கடலில் நிறுத்தப்பட்ட ஹெலிாகாப்டர் ஒன்றின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், இந்திய வான்படை சார்பில் பாங்கோங் சோ ஏரியினுள் அபாச்சி ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இவை சீன அத்துமீறல்களை முறியடிக்க ஏதுவாக தயார் நிலையில் இருப்பதாக தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்திய அபாச்சி ஹெலிகாப்டரின் ரகசிய அம்சம், இந்திய வான்படை இவற்றை தண்ணீருக்கு அடியில் நிறுத்தி வைத்திருபதன் மூலம் அம்பலமாகி உள்ளதாக அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2x4 டோர்பெடோஸ் மற்றும் லாங்போ சோனார் போன்றவை ஏரியினுள் வரும் சீன நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்தபோது, அவற்றில் பெரும்பாலான தகவலில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இந்த புகைப்படம் ஜார்டன் ஆழ்கடல் ராணுவ அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்டதாகும்.

இந்திய வான்படை சார்பில் அபாச்சி ஹெலிகாப்டர்கள் லடாக் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது உண்மை தான் என்றாலும், இவை தண்ணீருக்குள் இயங்கும் திறன் கொண்டிருக்கவில்லை. இதன் மூலம் வைரல் புகைப்படத்தில் உள்ளது இந்திய ராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.