பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க கோகனஸ்பர்க் நகருக்கு பயணமாகிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: நாளை பயணம்... பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜோகனஸ்பர்க் நகருக்கு பயணமாகிறார்.

பொருளாதாரம், உணவு பாதுகாப்பு போன்ற முக்கிய விவகாரங்களை இந்த மாநாட்டில் அவர் விவாதிக்க உள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா ,சீனா தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு பிரிக்ஸ் ஆகும்.

இந்த அமைப்பை விரிவுபடுத்தவும் மேலும் 22 நாடுகளை சேர்க்கவும் ஆலோசிக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவின் அழைப்பை ஏற்று 50க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்கின்றனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த மாநாட்டில் பங்கேற்பதால் பிரதமர் மோடியுடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் காணொளி வாயிலாக மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.