நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... மக்கள் தெருக்களில் தஞ்சம்

நேபாளம்: சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 69 பேர் உயிரிழந்தனர்.

ஜஜார்கோட் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாகவும், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உண்டானதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரு நிமிடத்திற்கும் மேலாக பலத்த அதிர்வுகளுடன் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஜஜார்கோட் மாவட்டத்தில் 26 பேரும், ருக்கும் மாவட்டத்தில் 28 பேரும் உயிரிழந்தனர்.

இடிபாடுகளுக்கு இடையே ஏராளமானோர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. டெல்லி, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனால் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.