அனைவரும் வாக்களித்து புதிய சாதனையை படைத்திட வேண்டும் .. பிரதமர் மோடி

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே அதன்படி மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து கொண்டு வருகின்றனர்.

மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், மேகாலயா, நாகாலாந்து மக்கள் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை நித றைவேற்றுங்கள் என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

மேலும், முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்கள் அனைவரும் வாக்களித்து புதிய சாதனையை படைத்திட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.