மக்கள் மன்றம் நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கி வரும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் திடீரென சமீபத்தில் வெளியான தகவலின் படி அவர் அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து பின்வாங்கி விட்டார் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் நேற்று ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் அனைவரும் ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் நாளை ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும், இந்த ஆலோசனைக்கு பின்னர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்த முக்கிய முடிவை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை ரஜினிகாந்த் வணங்கும் மகாஅவதார் பாபாவின் பிறந்த நாள் என்பதால் அந்த நாளில் அவர் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிப்பார் என அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

இந்த நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் நிலை குறித்து கருத்து கூறிய தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ ரஜினிகாந்த் நல்ல முடிவை எடுப்பார் என்றும், அவர் நல்ல மனிதர் என்றும், ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பிறகே அவரது கொள்கைகள் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்