இந்த 13 மாவட்டங்களுக்கு டிச.8ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை

சென்னை: ரெட் அலர்ட் எச்சரிக்கை ... தமிழகத்தில் நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் பெய்ய தொடங்கியது. கடந்த வருடங்களில் இல்லாத அளவு இந்த ஆண்டு மழை பொழிவு அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பரில் பெய்த மழையால் சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியது. வழக்கம் போல சென்னையில் காணும் இடமெல்லாம் மழை நீர் தேங்கி பொது மக்களை சிரமத்திற்கு ஆளாக்கியது.

அதனைத் தொடர்ந்து இன்று (டி.05) வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழக மற்றும் புதுவையில் அநேக இடங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, செங்கல்பட்டு, சென்னை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை தஞ்சாவூர், ஆகிய 13 மாவட்டங்களுக்கு டிச.8ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் 8ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வட தமிழகம்,புதுவை மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் வந்தடையும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து டிச.9ம் தேதியும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சென்னையை பொறுத்தவரையில்அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.