மின்வாரியத்துறையில் 5000 பணியிடங்கள் நிரப்ப ஒப்புதல் தருமாறு தமிழக அரசிடம் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் மின்வாரியத்துறையில் 55,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அவற்றில், மின் கம்பம் நடுதல், மின் சாதன பழுதை சரிசெய்தல் ஆகிய வேலைகளுக்கு மட்டுமே 40,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது.

ஆனால், தற்போது வரை பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல் தரப்படாத நிலையில் தற்போது பணியில் இருக்கும் மின் வாரிய ஊழியர்களே அப்பணியையையும் செய்து கொண்டு வருகின்றனர்.

இதனால், ஊழியர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுவதாக குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையே, கள பிரிவில் 10,200 ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும் என மின்வாரியம் தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

ஆனால், 1 ஆண்டுக்கும் மேலாக தமிழக அரசு கள பிரிவில் 10,200 ஊழியர்களை தேர்வு செய்ய ஒப்புதல் வழங்காத நிலையில் குறைந்தது ஊழியர்களின் சுமையை குறைக்கும் வகையில் 5000 ஊழியர்களையாவது பணியமர்த்த அனுமதி தர வேண்டும் என்று மின்வாரியம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.