கிரீமியா தீபகற்பத்தில் ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

கிரீமியா: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து... கிரீமியா தீபகற்பத்தில் ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.

ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியாவின் ஜான்கோய் மாவட்டத்தில் நேற்று மாலை வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த Mi-28N ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாகவும் இதில் ஹெலிகாப்டரில் பயணித்த இரு விமானிகளும் உயிரிழந்ததாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஹெலிகாப்டரில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.