இங்கு பள்ளி விடுமுறை நீட்டிப்பு

பஞ்சாப் : ஜனவரி 9-ம் தேதி வரை குளிர் கால விடுமுறை ... வட இந்தியா மாநிலங்களில் தற்போது அதிக பனி கொட்டி கொண்டு வருகிறது. இதனால் மிகவும் மோசமான வானிலை நிலவுகிறது. இந்த மோசமான வானிலை காரணமாக சம்பந்தப்பட்ட அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது.

இதையடுத்து பனி காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. அதாவது, குளிர் காலத்தில் காற்று அதிக கனமானதாக மாறுகிறது. இதனால் நச்சு துகள்கள் வளிமண்டலத்தில் இருந்து கீழ் நோக்கி கொண்டு வருகிறது.

மேலும், மாசுபட்ட புகை மற்றும் நிலத்தில் இருந்து நச்சு வாய்ந்த பொருட்களை எரிப்பதன் மூலமாகவும், வாகன புகை மூலமாகவும் காற்று அதிக புகை மூட்டமாக மாறுகிறது. இதனால், பின் லாகூரில் அதிக புகை மூட்டம் தற்போது நிலவி கொண்டு வருகிறது.

நேற்று 191 AQI என்ற மோசமான நிலையில் காற்று உள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது ஆரோக்கியமற்றதாக கருதப்படுவதால், லாகூர் உயர் நீதிமன்றம் அங்குள்ள பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜனவரி 9-ம் தேதி வரை குளிர் கால விடுமுறையை நீடிக்குமாறு கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.