பூமி பூஜையுடன் ராமர் கோவிலுக்கான அரசியல் முடிவுக்கு வர வேண்டும் - சிவசேனா

அயோத்தியில் நேற்று ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்துகொண்டு கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். ராமர் கோவிலுக்காக மறைந்த பால்தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் முன்களத்தில் நின்று போராடியது. தற்போது, மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ராமர் கோவில் கட்ட தனது கட்சி சார்பில் ரூ.1 கோடி வழங்கி உள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு சிவசேனாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்தநிலையில் சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னா, ராமர் கோவில் பூமி பூஜை முழு நாடு மற்றும் இந்துக்களுக்கானது. கரசேவகர்களின் தியாகத்தால் நுகரப்பட்ட மண்ணில் இன்று ராமர் கோவில் கட்டப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு கண்ட சுப்ரீம் கோர்ட்டு, ராமர் கோவில் கட்ட பாதை அமைத்து கொடுத்தது.ந்த வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பூமி பூஜை விழாவுக்கு அழைக்கப்படவில்லை. பாபர் மசூதி இடிப்பில் முக்கிய பங்கு வகித்த சிவசேனா கூட அழைக்கப்படவில்லை என்று சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், தற்போது ராமர் கோவில் பூமி பூஜை தருணத்தில் கரசேவகர்களின் தியாகத்தை மறந்தவர்கள், ராமரின் துரோகிகள். இந்த பூமி பூஜையுடன் ராமர் கோவிலுக்கான அரசியல் முடிவுக்கு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.