தீப திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சிறப்பு பேருந்துகள் இயக்கம் ... தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் மாதம் ஆன கார்த்திகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மகா தீப விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த கோவிலில் ஏற்றப்படும் தீபத்தை காண தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருவிழா கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. இந்த ஆண்டு தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை அடுத்து இத்தகைய பிரசித்தி பெற்ற விழா நடப்பாண்டு டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனையடுத்து நேற்று முதல் விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த 10 நாட்களுக்கு தேரோட்டம் சுவாமி ஊர்வலம் என சிறப்பு பூஜை நடைபெறும். அடுத்ததாக டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை சாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு சுவாமி வழிபாடு நடைபெறும்.

இந்த தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 06ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சென்று வர ஏதுவாக டிச.5,6,7 ஆகிய 3 தினங்களும் சென்னை, நெல்லை, புதுச்சேரி, சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்களுக்கு 4454 56040, 94454 56043 என்ற எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.