மாணவர் சேர்க்கை, கட்டணம் வசூலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை; அதிகாரிகள் எச்சரிக்கை

அரசு அறிவிக்காத நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர். காரணம் மாணவர்கள் சேர்க்கை, பெற்றோர்களிடம் கட்டணம் வசூல் செய்கின்றனர் என்று புகார்கள் தொடர்ந்து வருவதால்தான்.

தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில், சில அடிப்படை பணிகளை மட்டும் மேற்கொள்ள அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. தனியாா் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தி கொள்ளலாம்.

அதேபோன்று தேவையான சில பணிகளை ஆன்லைனில் மேற்கொள்ளலாம். அதற்கு மாறாக, பள்ளிகளைத் திறந்து வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.

இந்நிலையில், மாணவா் சோக்கையை நடத்துதல், கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பணிகளை சில தனியாா் பள்ளிகள் மேற்கொண்டுள்ளன. பெற்றோரைப் பள்ளிக்கு வரவழைத்து, அவா்களிடம் விண்ணப்பங்களையும் பெறுகின்றன.

அதேபோன்று மாணவா்களுக்கு நுழைவுத் தோவு மற்றும் நேர்முகத் தோவு நடத்துகின்றன. இது குறித்து, புகாா்கள் வந்த பள்ளிகள், சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து கொரோனா பொது முடக்க காலத்தில் அரசு அறிவிக்காத பணிகளை, பள்ளிகள் மேற்கொள்ளக்கூடாது. மாணவா்கள் மற்றும் பெற்றோரை பள்ளிக்கு வரவழைப்பது கூடாது. உத்தரவை மீறும் பள்ளிகள் மீது தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.