வீடற்ற மக்களின் வேதனையை போக்க மாணவர்கள் உதவிக்கரம்

கனடா: வீடற்ற மக்களுக்காக கனடாவின் பிராம்டன் பாடசாலை மாணவர்கள் பொருட்களை சேகரித்துள்ளனர். இதையடுத்து மாணவர்களின் சேவையை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

பிராம்ப்டன் பாடசாலை மாணவர்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு காலூறைகளை சேகரித்துள்ளனர். வீடற்ற மற்றும் வறுமையில் வாடும் மக்கள் குளிர்காலத்தில் நெருக்கடிகளை எதிர்நோக்குவதனை தவிர்க்கும் நோக்கில் இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளன.

குளிர்காலத்தில் காலுறைகள் மிகவும் இன்றியமையாதவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கால்கள் குளிரானால் ஒட்டுமொத்த உடலும் குளிரை உணர நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

காலை வேளையில் மாணவர்கள் ஒவ்வொரு டொலர்களாக சேகரித்து இவ்வாறு சுமார் ஆயிரத்து ஐநூறு காலுறைகளை சேகரித்து ஏழை மக்களுக்கு வழங்க உள்ளனர். காலுறைகள் மட்டுமன்றி உடைகள், உணவு என பல்வேறு பொருட்களை திரட்டி ஏழை மக்களுக்கு உதவுவதற்கு மாணவர்கள் நாட்டம் காட்டி வருவதாக பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.