கிசான் திட்டத்தின் கீழ் நாளை விவசாயிகளுக்கு உதவித் தொகை

கிசான் திட்டத்தில் உதவித் தொகை... ஒன்பது லட்சம் விவசாயிகளுக்கு, 'கிசான்' திட்டத்தின் கீழ் தலா, 2,000 ரூபாய் உதவித்தொகையை, பிரதமர் நரேந்திர மோடி நாளை(டிச.,25) வழங்க உள்ளார்.

பிரதமரின் 'கிசான்' திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தலா, 2,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம், விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த ஆண்டின் மூன்றாவது தவணையாக, ஒன்பது கோடி விவசாயிகளுக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட உள்ளது.

உதவித்தொகை வழங்கும் பணிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாளை துவங்கி வைக்கிறார். அப்போது, ஆறு மாநில விவசாயிகளுடன் அவர் பேசுகிறார்.

இத்திட்டத்தின் பயன் மற்றும் தங்கள் நலனுக்காக, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த கருத்துகளை, விவசாயிகள் பிரதமருடன் பகிர்ந்து கொள்வர் என, பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.