பொது போக்குவரத்துக்கு டாட்டா; சைக்கிளுக்கு மாறிய மக்கள்

பொது போக்குவரத்தே வேண்டாம் என்று சைக்கிள் பயன்பாட்டில் இறங்கி விட்டனர் பொது மக்கள்.

மெக்சிகோவில் கொரோனா பரவல் அச்சுறுத்தலால் பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்து சைக்கிளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

மெக்சிகோவில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் மெக்சிகோ சிட்டி நகரமும் ஒன்றாகும். கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால், பேருந்துகளில் செல்வதையும், கார்களில் செல்வதையும் தவிர்த்து, சைக்கிளை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதனால் சைக்கிளின் விற்பனை அதிகரித்திருப்பதோடு, சுற்றுச்சூழல் மாசுபாடும் குறைந்திருப்பதாக அங்கிருந்தோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது என்று மெக்சிகோ மக்கள் தெரிவித்துள்ளனர்.