லெபனான் பெய்ரூட் நகரில் பயங்கர வெடிவிபத்து; நகரே உருக்குலைந்தது

பயங்கர வெடி விபத்து... லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதால், து பெய்ரூட் நகரே உருக்குலைந்துள்ளது

இந்த வெடிவிபத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய வீடியோக்கள் அச்சத்தையும், கவலையையும் அளிப்பதாக உள்ளது இந்த விபத்தில் தற்போது வரை 80 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து இருக்கலாம் என்றும் லெபனான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த விபத்தை அடுத்து பெய்ரூட் நகரில் 2 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணி மற்றும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருவதாகவும் லெபனான் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியர்களுக்கு உதவ அவசர உதவி மையத்தை லெபனான் இந்திய தூதரகம் அமைத்துள்ளது.

இந்திய நேரப்படி நேற்று இரவு பெய்ரூட்டில் உள்ள துறைமுக பகுதியில் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பழைய வெடிபொருட்கள் குடோனில் வெடிகள் வெடித்து சிதறியது. இந்த பயங்கர வெடி விபத்தால் ஏற்பட்ட நில அதிர்வை பெய்ரூட் மட்டுமல்லாமல் அந்நகருக்கு அருகில் உள்ள தீவுகளிலும், பக்கத்து நாட்டில் உள்ள பகுதியிலும் உணரப்பட்டது.

இந்த வெடிவிபத்தில் துறைமுகமே உருகுலைந்து போனது, அருகில் இருந்த. வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. . சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் தீயில் கருகின.. பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள வீடுகளின் கண்ணாடிகள் நெறுங்கின. பெய்ரூட் நகரில் பல வீடுகளில் பால்கனிகள் இடித்து விழுந்தன. மொத்த பெய்ரூட் நகரமும் புகைமூட்டமாக காணப்படுகிறது.