தமிழகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 709 மருத்துவமனைகள் திறப்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் .. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனாவால் பல பாதிப்புகள் ஏற்பட்டது. அதை தடுக்க தடுப்பூசி செலுத்துவதே ஒரே தீர்வாக இருக்கிறது. மேலும் கொரோனாவின் 3 அலைகளால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 4-ம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அது குறித்து பல நடவடிக்கைகளை அரசு எடுத்து கொண்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், தற்போது, மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது.

அதனால் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ஒரு சில மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை தடுக்க தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் வருகிற 21 ஆம் தேதி 50,000 சிறப்பு முகாம்கள் மூலம் கொரோன தடுப்பூசி – பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட இருப்பதாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா நான்காம் அலை தாக்கம் ஏற்பட்டாலும் அதை தடுக்க நவீன வசதிகளுடன் கூடிய 709 மருத்துவமனைகள் திறப்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

மேலும் அதன் மூலம் மக்களுக்கு சிறப்பான முறையில் மருத்துவம் பார்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இதன் மூலம் தமிழகத்தில் மருத்துவ துறையின் தரம் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.