கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது

இந்தியா: உலகளவில் பல வளர்ந்த நாடுகளும் கொரோனா என்னும் கொடிய வைரஸால் சிக்கி தவித்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவின் வீரியம் சற்று குறைந்தாலும், இன்னும் அது முழுமையாக நீங்கவில்லை.

அந்த வகையில் இந்த வைரஸால் பலர் தங்களுடைய நெருக்கமான உறவுகளை இழந்து இருக்கின்றனர். இந்த நிலையில் உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டி இருக்கிறது.


அதாவது பல நாடுகளை சேர்ந்த 6,874,311 பேர் கொரோனா பாதித்து இறந்து இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. மேலும் அது மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் 688,269,375 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 660,704,584 பேர் குணமடைந்து இருக்கின்றனர்.

இதையடுத்து தற்போது 38,967 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.