டெல்லியில் ஒரு கல்வியாண்டில் குறைந்தபட்சம் 220 வேலை நாட்கள் இருக்க வேண்டும் ..கல்வித்துறை உத்தரவு

புது டெல்லி: 220 வேலை நாட்கள் கட்டாயம் ... டெல்லியில் கடந்த மாதம் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் விடுமுறை நாட்கள் பற்றி கல்வி இயக்குனரகம் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வெளியிட்டு உள்ளது.

அதாவது டெல்லி பள்ளிகள் ஒரு கல்வியாண்டில் குறைந்தபட்சம் 220 வேலை நாட்களை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


இதையடுத்து புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பும், விடுமுறையை கடைபிடிப்பதற்கு முன்பும் அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 220 வேலை நாட்கள் முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிட்டு உள்ளது.

மேலும் RTE சட்டம்-2009 மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2023 இன் பிரிவு 19 இன் படி, கல்வி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.