கொரோனா வைரஸ் பரவலுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்; பாலித ரங்கே பண்டார வலியுறுத்தல்

பதவி விலக வேண்டும்... நாட்டில் மீண்டும் அதிகரித்திருக்கும் கொரோனா வைரஸ் பரவல் நிலைக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் இதனைக் கட்டுப்படுத்த முடியாத தமது தோல்வியை ஏற்றுக்கொண்டு உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்று பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பெரும் எண்ணிக்கையில் பரிசோதனைகளை முன்னெடுப்பது அவசியமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியபோது, அதனை ஆளுந்தரப்பினர் கேலி செய்தனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ள நிலையில் அரசாங்கம் தமது பொதுத்தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நிறுத்தாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப் பதவி விலகவேண்டும் என பாலித ரங்கே பண்டார வலியுருத்தினார்.

அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் அரச ஊழியர்களின் நலனை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட அனைத்து செயற்திட்டங்களையும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இடைநிறுத்திவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

அவ்வாறிருக்க நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்ட திட்டங்களை செயற்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அவர்கள் கோருவதாகவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.