சென்னையில் வீட்டிலேயே கள்ளநோட்டு அடித்த நபர் சிக்கினார்

வீட்டிலேயே கள்ளநோட்டு அடித்த நபர்... சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள கடைகளுக்குச் சென்ற நபர் பொருட்கள் வாங்கிவிட்டு ரூ.2000 நோட்டை கொடுத்துள்ளார். அதனை பெற்ற கடைக்காரககு ரூபாய் நோட்டு மீது சந்தேகம் வந்தது. இதனையடுத்து அந்த 2000 ரூபாய் நோட்டு கள்ளநோட்டு என்பதும் தெரியவந்தது.

எனினும் அந்நபர் அங்கிருந்து சென்றுவிட்டதால் கடைக்காரர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பைக்கில் சென்ற நபரை மடக்கி விசாரித்தனர்.

விசாரணையில் அவர் புளியந்தோப்பைச் சேர்ந்த இல்யாஸ் என்பதும், கடைகளில் கள்ள நோட்டுக்களைக் கொடுத்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஜெராக்ஸ் இயந்திரம் மூலம் கள்ளநோட்டு அச்சடித்தது தெரியவந்தது.

பின்னர் அவரிடம் இருந்து கள்ள நோட்டுக்கள் மற்றும் ஜெராக்ஸ் இயந்திரத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியப்போது, விரைவில் பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், யூ-டியூப்பைப் பார்த்து கள்ள நோட்டுக்களைத் தயாரித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். ,இதனிடையே இவர் வேறு எங்கெல்லாம் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்டுள்ளார், இவர் மட்டும் தானா அல்லது கூட்டளிகள் யாரும் உள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.