மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் இதற்க்காக தான்

இந்தியா: தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்று மத்திய சுகாதார இயக்குனரகத்திற்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் மாறுபாடு இந்தியாவிலும் நுழைந்தது. குஜராத்தில் 2 மற்றும் ஒடிசாவில் ஒரு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியானது. சீனாவில் பரவிவரும் BF7 ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும், புதியவகை கொரோனாவின் தன்மைகள் பற்றி கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்றின் தாக்கம் உயர்ந்து உள்ள நிலையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.

எனினும் வெளிநாட்டு விமான பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை வழிகாட்டுதல்கள வழங்க வேண்டும். சீனா, ஹாங்காங்கில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் பரிசோதனை தேவைஎன தெரிவித்துள்ளது.