ஆளில்லா விண்கலத்தின் உள்ளமைப்புகள் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு... விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சீன ஆளில்லா விண்கல காப்ஸ்யூலின் உள்ளமைப்புகள், பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.

புதிய தலைமுறை ஆளில்லா விண்கலமான லாங் மார்ச் -5 பி கேரியர் ராக்கெட்டை சோதனை முயற்சியாக கடந்த மே 5 ஆம் தேதி சீனா விண்ணுக்கு அனுப்பியது.
அதன் காப்ஸ்யூல், 3 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வளிமண்டல வெப்பத்திலிருந்து தப்பித்து மே 8 ஆம் தேதி மங்கோலியாவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெப்ப பாதுகாப்பு மேற்பரப்பு ஆங்காங்கே எரிந்து போனநிலையில், உள்பகுதி அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பாகங்களாக பிரிக்கக்கூடிய இந்த கலனில், ஒருபுறம் விண்வெளி வீரர்கள் தங்கவும் மற்றொரு புறம் பொருட்களை வைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.