ஆதார் அட்டையில் அப்டேட் செய்ய செப். 14 இறுதி நாள்

சென்னை: மக்களுக்கு முக்கியமான ஆவணங்களில் ஒன்றான ஆதார் அட்டையில் அப்டேட் செய்ய செப்.14 கடைசி நாள் ஆகும். அதற்கு மேல் அப்டேட் செய்தால் கட்டணம் வசூல் ...இந்தியாவில் முக்கிய ஆவணமான ஆதார் அட்டை பல்வேறு சேவைகளுக்கு தேவையான ஒன்றாக இருக்கிறது.

இந்த நிலையில் ஆதார் அட்டையில் இலவசமாக அப்டேட் செய்ய வரும் செப் 14 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சேவை myAadhaar போர்ட்டலில் மட்டுமே இலவசமாக செய்ய முடியும். மேலும் செப்.14 ஆம் தேதிக்குள் இதனை செய்யாமல் இருந்தால் வரும் செப். 15 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும்.


மேலும் செப்டம்பர் மாதத்திலேயே ஆதார் அட்டை தொடர்பான வேலைகளை முடித்தால் மக்களுக்கு பணம் மிச்சமாகும். இதற்கு முன்னதாக ஜூன் 14 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது செப். 14 கடைசி தேதியாக நீட்டிக்கப்பட்டது.

இதனையடுத்து இனிமேல் இலவசமாக அப்டேட் செய்யும் வாய்ப்பு நீட்டிக்கப்படாது என்று UIDAI உறுதியாக தெரிவித்துள்ளது. அதனால் ஆதாரில் உங்களுடைய பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்டவற்றை சரியாக வைத்திருக்க, மக்கள் விரைவாக அப்டேட் செய்ய வேண்டும்.