குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி : குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு .... தென்காசி மாவட்டத்திற்கு தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துயிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலான முதல் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 6 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் குற்றால அருவிகளில் நீர்வரத்து உயர்ந்து காணப்படுகிறது.


எனவே இதன் காரணமாக குற்றால் மெயின் அருவிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு வளையத்தை தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.