14 லட்சம் அமெரிக்க நடுத்தர வர்க்க குடிமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்தோருக்கான நிதியை அரசு ரத்து செய்துள்ளது. இது 14 லட்சம் அமெரிக்க நடுத்தர வர்க்க குடிமக்களை பாதித்துள்ளது.

வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தனது இறுதிக்கட்ட அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது அமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்தோருக்கான நிதியை அரசு ரத்து செய்துள்ளது. இது 14 லட்சம் அமெரிக்க நடுத்தர வர்க்க குடிமக்களை பாதித்துள்ளது. குடிமக்கள் மத்தியில் டிரம்பின் இந்த நடவடிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் அமெரிக்கர்கள் பலர் வேலை இழந்தனர். இதனால் அவர்களது வாழ்வாதாரத்திற்காக அரசு 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கியது.

தற்போது இந்த நிதியின் கால வரையரை முடிவுக்கு வந்த நிலையில் புதிதாக 892 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்க ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. டிரம்பின் கையெழுத்து இல்லாமல் இந்த மசோதா முழுமை பெறாது. ஆனால் அமெரிக்க அரசு நிதி நிலைமையை கணக்கிட்டு தன்னால் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அத்தியாவசிய தொழில்கள் பல அமெரிக்காவில் முடங்கிய நிலையில் அரசு நிதியை தேவைக்கு ஏற்ப மட்டுமே செலவழிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.