ட்விட்டரில் தற்போது புது அப்டேட் ஒன்று அறிமுகம்

இந்தியா: ட்விட்டர் பக்கத்தில் பயனர்களை Block செய்யும்படியாக Mute செய்யும் அப்டேட் வெளியீடு ...டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் – எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் தொடர்ந்து டிவிட்டர் தளத்தில் அதிரடியான பல மாற்றங்களை செய்து கொண்டு வருகிறார்.

அதாவது, பணம் செலுத்தி ப்ளூ டிக்கை பெறும் வசதி, வீடியோ கால் வசதி என்று பயனர்களின் அனுபவத்தை சிறப்பாகும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ட்விட்டர் தளத்தில் Block செய்யும்படியான அப்டேட் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது Block அம்சத்துடன் கூடுதலாக Mute என்னும் அம்சமும் வழங்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். இந்த Mute அம்சத்தின் மூலமாக தவறான தகவலை வழங்கும் பயனர்கள், பிடிக்காத பயனர்கள் என்று யாரை வேண்டுமானாலும் Mute செய்து கொள்ளலாம்.

ஆனால் அதே நேரத்தில், ஏதேனும் பயனர்களிடம் இருந்து முழுமையாக நீங்க வேண்டுமெனில் விருப்பத்தின் அடிப்படையில் Blockம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.