முகக்கவசம் அணிவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்

கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிய வேண்டும்... கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு முகக்கவசத்தை அணிவதன் மூலம் சுமார் 70 சதவீதத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயரூபன் பண்டார கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இந்த தொற்று சமூகத்தின் மத்தியில் பரவவில்லை என்றும் கூறினார்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட தானியங்கி பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களில் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்படவுள்ளது என்பது தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.

மேலும், நாட்டில் இம்முறை கொரோனா வைரஸ் பரவல் முன்னர் பரவியதிலும் பார்க்க அதிகமாக காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஜயரூபன் பண்டார மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.