பெலாரஸ் அதிபர் பதவி விலக வலியுறுத்தி பெண்கள் போராட்டம்

அதிபரை எதிர்த்து போராட்டம்... பெலாரஸில் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பெண்கள், பூக்கள், பலூன்கள், கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 6வது முறையாக அலெக்சாண்டர் லுகாஷென்கோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மோசடி செய்து அவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக குற்றஞ்சாட்டி கடந்த சில வாரங்களாக போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டங்கள் பற்றிய தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு பல வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் அங்கீகாரத்தை பெலாரஸ் அரசு ரத்து செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தலைநகர் மின்ஸ்கில் பெண்கள் பெருந்திரளாக கூடி அரசுக்கு எதிராக பேரணி நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.