Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • யோக நிலையில் காட்சி தரும் கல்வி தெய்வம் ஹயக்ரீவர்

யோக நிலையில் காட்சி தரும் கல்வி தெய்வம் ஹயக்ரீவர்

By: Nagaraj Sun, 13 Sept 2020 11:22:30 AM

யோக நிலையில் காட்சி தரும் கல்வி தெய்வம் ஹயக்ரீவர்

கல்வி தெய்வமான ஹயக்ரீவர், சென்னைக்கு அருகே, செங்கல்பட்டு அருகிலுள்ள செட்டிபுண்ணியம் தேவனாத பெருமாள் கோயிலில், யோக நிலையில் காட்சி தருகிறார்.

இவரை மாணவர்கள் தரிசித்தால், நினைவாற்றல் பெருகி, நல்ல மதிப்பெண் பெற வாய்ப்பு கிடைக்கும். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு, 1848, கடலூர் அருகிலுள்ள திருவஹீந்திரபுரத்திலிருந்து ஹயக்ரீவர் சிலையை எடுத்து வந்தனர்.

அந்த சிலையை வைகாசி மக நட்சத்திரத்தில், செட்டிப் புண்ணியத்தில் பிரதிஷ்டை செய்தனர். பின்னர் தாயார் ஹேமாம்புஜவல்லி ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆண்டாள் சந்நிதிகள் அமைக்கப்பட்டன. மூலவர் வரதராஜர், உற்சவர் தேவனாத ஸ்வாமி என்று அழைக்கப்படுகின்றர். இங்கு வித்யா-தோஷ நிவர்த்தி சங்கல்ப ஆராதனை என்னும் கல்வி பூஜை நடத்தப்படுகின்றது.

highgriver,students,memory,parents
highgriver is the goddess of education who demonstrates yoga ,ஹயக்ரீவர், மாணவர்கள், நினைவாற்றல், பெற்றோர்கள்

தேர்வு சமயத்தில் மாணவர்கள் பேனா, பென்சில், ஹால்டிக்கெட் ஆகியவற்றை பெருமாளின் பாதத்தில் சமர்ப்பித்து வழிபட , ஞாபகசக்தி அதிகரிக்கும். 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த வழிபாட்டை அதிகமாக செய்கின்றனர்.

மாணவர்கள் சார்பில், அவர்களது பெற்றோர்களும் வந்து பிள்ளைகள் பெயரில் அர்ச்சனை செய்யலாம். நேரில் வரமுடியாத பக்தர்களுக்காக, பூஜையில் வைக்கப்பட்ட ஹயக்ரீவர் படம் மற்றும் பேனா தபாலில் அனுப்பப்படுகிறது. திக்குவாய் உள்ளவர்கள், பேச முடியாதவர்களுக்கு நாக்கில் தேன் தடவப்படுகின்றது.

இதன்மூலம் பேசும் திறன் உண்டாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
இருப்பிடம்: சென்னை-செங்கல்பட்டு ரோட்டில் சிங்கப் பெருமாள் கோயிலில் இருந்து 3 கிமீ. திறக்கும் நேரம்: காலை 7.30-12.00; மாலை 4.30-இரவு 8.00.

Tags :
|