Advertisement

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 108 வீணை இசை வழிபாடு

By: Nagaraj Thu, 06 Oct 2022 10:46:25 AM

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 108 வீணை இசை வழிபாடு

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கல்வி மேம்பாடு வேண்டி 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 26-ஆம் தேதி துவங்கிய நவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோயிலில் பல்வேறு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர். ஒவ்வொரு நாளும் மாலையில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

students,music lovers,enjoyed veena music,madurai ,மாணவ, மாணவிகள், இசை ஆர்வலர்கள், ரசித்தனர், வீணை இசை, மதுரை

நவராத்திரி விழாவின் 9-ஆம் நாள் விழாவான விஜயதசமியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கல்வி மேம்பாடு வேண்டி கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது.

இந்த வீணை இசை வழிபாட்டு நிகழ்ச்சியை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசி ஸ்ரீமதி தொடங்கி வைத்தார். இதில் மதுரை, சென்னை, நாமக்கல், திண்டுக்கல், ஆகிய பகுதிகளில் இருந்து மாணவிகள், பேராசிரியர்கள் என ஏராளமானவர்கள் வீணை வழிபாட்டில் பங்கேற்பு செய்தனர்.


வீணை வழிபாட்டின் போது மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் பாடல்கள் பாடப்பட்டன, விநாயகர் பாடல் உட்பட 22 பாடல்கள் வீணை இசை வழியே இசைக்கபட்டன, வீணை இசை வழிபாட்டை பக்தர்கள், மாணவ மாணவியர்கள் , பெற்றோர்கள் , இசை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Tags :