Advertisement

திருப்பதி தேவஸ்தான பெயரில் 41 போலி இணையதளம்

By: vaithegi Tue, 25 Apr 2023 11:26:07 AM

திருப்பதி தேவஸ்தான பெயரில் 41 போலி இணையதளம்


திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தானம் https://tirupatibalaji.ap.gov.in/ என்கிற இணைய தளத்தின் மூலம் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கி கொண்டு வருகிறது.

மேலும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், பக்தர்கள் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு, இ-உண்டி, நன்கொடைகள் என்று அனைத்து சேவைகளுக்கும் இந்த இணைய தளத்தை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்திவுள்ளது.

மேலும், TTDevasthanams என்கிற மொபைல் செயலியையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. எனவே இதன் மூலமாகவும் பக்தர்கள் டிக்கெட், அறைகள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

tirupati,ttdevasthanams ,திருப்பதி ,
 TTDevasthanams

இந்த நிலையில் தேவஸ்தான இணைய தளத்தை போலவே பல போலி இணைய தளங்கள் இணையத்தில் உலா வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இது பற்றி தேவஸ்தானத்தின் ஐ.டி. பிரிவு கண்டறிந்து திருமலை போலீஸாருக்கு புகார் அளித்தது. எனவே அதன்படி 41 போலி இணைய தளங்களை தடை செய்யவும், அவற்றின் மீது கிரிமினல் வழக்குகள் தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :