Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • மண்டல பூஜை, மகர விளக்கு காலத்தில் நேற்று வரை 56 நாட்களில் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

மண்டல பூஜை, மகர விளக்கு காலத்தில் நேற்று வரை 56 நாட்களில் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

By: vaithegi Sat, 14 Jan 2023 11:13:50 AM

மண்டல பூஜை, மகர விளக்கு காலத்தில் நேற்று வரை 56 நாட்களில் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

சபரிமலை: சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று நடக்கிறது. ஜோதி தரிசனம். இதனையொட்டி இன்று மாலை 6.20 மணிக்கு அய்யப்பனுக்கு ஆபரணங்களை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. அப்போது பொன்னம்பல மேட்டில் சாமி அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். இந்த ஆண்டு மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையின் சுற்று வட்டார பகுதியில் குவிந்துள்ளனர்.

மேலும் ஏற்கனவே மகரவிளக்கு பூஜை நாளில் சபரிமலைக்கு வருவதற்கு முன்பதிவு செய்தவர்களும் இன்று குவிய உள்ளனர்.எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணிக்காக பம்பை, சன்னிதானத்தில் 3 ஆயிரம் போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த வருடம் கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் மண்டல பூஜை, மகர விளக்கு காலத்தில் நேற்று வரை 56 நாட்களில் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

devotees,mandala puja,makara lamp ,பக்தர்கள் ,மண்டல பூஜை, மகர விளக்கு

இக்காலங்களில் சபரிமலைக்கு கடந்த ஆண்டை விட வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது. "நடப்பு சீசனையொட்டி சபரிமலையில் 12-ந் தேதி (நேற்று) வரை ரூ.310.40 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதில் அரவணை விற்பனை மூலமாக மட்டும் ரூ.140.75 கோடி வசூலாகி உள்ளது." என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் அவர்கள் கூறினார்.

மேலும் கடந்த வருடம் 61 நாட்களில் சபரிமலையில் 19.39 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.151 கோடி வருமானம் கிடைத்தது. ஆனால் இந்த வருடம் பக்தர்கள் வருகையும், வருமானமும் 2 மடங்காக அதிகமாகி உள்ளது.

Tags :