Advertisement

திருப்பதியில் நேற்று 75,382 பேர் சாமி தரிசனம்

By: vaithegi Sat, 01 Oct 2022 11:38:50 AM

திருப்பதியில் நேற்று 75,382 பேர்  சாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று இரவு ஏழுமலையான் சர்வ பூபால வாகனத்தில் 4 மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை மோகினி வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெறுகிறது.

இதையடுத்து இரவு 7 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் மாடவீதிகளில் உலா வருகிறார். ஏறக்குறைய 3 லட்சம் பக்தர்களுக்கு கருட சேவை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

tirupati,darshan ,சாமி தரிசனம்,திருப்பதி

மேலும் நேற்று மதியம் முதல் இன்று இரவு வரை பைக்குகள் திருமலைக்கு செல்ல அனுமதி வழங்காததால் பஸ்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டத்தை காண முடிகிறது. பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு குடிநீர் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

இதையடுத்து இன்று இரவு ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலை அணிவிக்கப்படுகிறது. திருப்பதியில் நேற்று மட்டும் 75,382 பேர் தரிசனம் செய்தனர். 31,434 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.85 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags :