Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி ஏழுமைலையான் திருக்கோயிலில் புதிய கவுண்டர் ஒன்று திறப்பு

திருப்பதி ஏழுமைலையான் திருக்கோயிலில் புதிய கவுண்டர் ஒன்று திறப்பு

By: vaithegi Thu, 01 Dec 2022 8:33:12 PM

திருப்பதி ஏழுமைலையான் திருக்கோயிலில் புதிய கவுண்டர் ஒன்று திறப்பு

திருப்பதி: சுவாமியை அருகில் சென்று தரிசிக்க பக்தர்களுக்கு வாய்ப்பு .... திருப்பதியில் கடந்த வருடங்களில் நிலவிய கொரோனா தாக்கத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் பிரம்மோற்சவ விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பு ஆண்டு இயல்பு நிலை திரும்பியுள்ளதால் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தற்போது திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் புதிய கவுண்டர் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதாவது திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் சார்பாக ஸ்ரீவாணி என்ற அறக்கட்டளை இயங்கி கொண்டு வருகிறது. எனவே இதன் கீழ் பெறப்படும் நிதிகளை வைத்து சிறிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

tirupati,new counter ,திருப்பதி ,புதிய கவுண்டர்

மேலும் புதிய கோயில்களும் கட்டப்பட்டு வருகிறது. தற்போது ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ. 10,000 நன்கொடை வழங்குபவர்கள் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவர்கள் கருவறை அருகே அதாவது மூலவர் சிலைக்கு 10 அடி தொலைவில் நின்று சுவாமி தரிசனம் செய்யலாம். இந்த வசதியை பெற பக்தரிடம் ரூ. 500 பெறப்பட்டு அவர் விரும்பும் நாளில் தரிசிக்க விஐபி பிரேக் டிக்கெட் வழங்கப்படுகிறது.

இதனை அடுத்து இதுவரை ஆன்லைன் வாயிலாக வழங்கப்பட்டு வந்த இந்த டிக்கெட்டை இனி நேரடியாக திருப்பதியில் வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதற்காக திருப்பதி மாதவம் பக்தர்கள் ஓய்வறையில் புதிய கவுண்டர் நேற்று திறக்கப்பட்டது.

Tags :