Advertisement

வீண் விரைய செலவுகளை குறைக்க உதவும் பரிகாரம்

By: Nagaraj Fri, 07 Oct 2022 10:24:09 PM

வீண் விரைய செலவுகளை குறைக்க உதவும் பரிகாரம்

சென்னை: வீண் விரைய செலவுகளை குறைக்க செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை தெரிவித்துக் கொள்ளலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் இரண்டு. படிகாரம், மைசூர் பருப்பு. ஒரு சிகப்பு துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.


அதில் ஒரு சிறிய கட்டி படிகாரத் துண்டு வைத்து விடுங்கள். ஒரு கைப்பிடி மைசூர் பருப்பையும் வைத்துவிட்டு, முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை, விரைய செலவு ஆகும் குறிப்பிட்ட அந்த பொருளுக்கு சுற்றி போட வேண்டும். உதாரணத்திற்கு உங்க பைக் அடிக்கடி செலவு வைப்பதால், அந்த பைக்கை இந்த சிவப்பு முடிச்சை கொண்டு சுத்தி போடுங்க.


வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லையா. அவர்களுக்கு கிழக்கு பார்த்துவாரு அமர வைத்து அவர்களுடைய தலையை 3 முறை சுற்றி விடுங்கள். உங்களுடைய வீட்டுக்கே நேரம் சரியில்லையா. உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களுமே வீண் விரைய செலவுகளை கொடுக்கிறதா. உங்களுடைய நிலை வாசல் படிக்கு வெளியில் நின்று உங்கள் வீட்டிற்கே திருஷ்டி கழிப்பது போல, இந்த முடிச்சை வைத்து திருஷ்டி கழித்து விடுங்கள்.

vain haste,expenses,remedy,alum,dal ,வீண் விரையம், செலவுகள், பரிகாரம், படிகாரம், பருப்பு

ஒரே முடிச்சு எல்லா பொருட்களுக்கும் சுற்றக்கூடாது. தனித்தனியாக ஒவ்வொரு பொருளுக்கு திருஷ்டி கழிக்க ஒவ்வொரு முடிச்சு தயார் செய்து கொள்ள வேண்டும். திருஷ்டி கழித்த இந்த சிவப்பு முடிச்சு உள்ளே இருக்கும் பொருட்களை ஓடும் தண்ணீரில் விட வேண்டும். அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமாக கால் படாத இடத்தில் கொண்டு போய் இந்த இரண்டு பொருட்களையும் போடலாம். வீட்டின் அருகில் ஏதாவது கிணறு இருந்தால் கூட துணியை எடுத்து விட்டு உள்ளே இருக்கும் படிகாரம் பருப்பை மட்டும் அந்த கிணற்றுக்குள் போட்டு விடுங்கள்.


இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமையில் செய்யலாம். மாலை நேரத்தில் பரிகாரம் செய்வது சிறப்பு. அப்படி இல்லை என்றால் அமாவாசை தினத்தில் செய்யலாம். மாதம் ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து வந்தால், வீண் விரைய செலவுகள் குறையும்.

Tags :
|
|