ஐயப்ப பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
By: vaithegi Sun, 19 Nov 2023 1:31:42 PM
சபரிமலை: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக குமுளி மலைப்பாதை ஒருவழி பாதையாக மாற்றம் .... கார்த்திகை மாதம் துவங்கி உள்ள நிலையில் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிய துவங்கிவிட்டனர்.
இந்த நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கம்பத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கம்பம் மெட்டு வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து இந்த வழியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும், ஐயப்ப பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதே போன்று, சபரிமலை சென்றுவிட்டு திரும்பும் பக்தர்கள் மலைப்பாதை வழியாக கீழிறங்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே, சபரிமலை சீசன் முடியும் வரைக்கும் வருகிற நவ.20 ஆம் தேதி முதல் குமுளி மலைப்பாதை பகுதியை ஒருவழி பாதையாக பயன்படுத்தும்படி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.