Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • இதற்கான சிறப்பு கவுண்டர் திருப்பதியில் இன்று தொடக்கம்

இதற்கான சிறப்பு கவுண்டர் திருப்பதியில் இன்று தொடக்கம்

By: vaithegi Wed, 30 Nov 2022 10:01:20 PM

இதற்கான சிறப்பு கவுண்டர் திருப்பதியில் இன்று தொடக்கம்

திருப்பதி : இன்று தொடக்கம் .... திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வி.ஐ.பி. தரிசனத்தில் செல்ல யாருடைய சிபாரிசும் இல்லாமல் செல்வதற்கான சிறப்பு கவுண்டர் திருப்பதியில் இன்று தொடங்கப்பட்டது. திருப்பதியில் உள்ள மாதவம் பக்தர்கள் ஓய்வறையில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான நன்கொடை கவுண்டர்களை இணை செயலதிகாரி வீரபிரம்மம் பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வீரபிரம்மம், “திருமலையில் நேரடியாக வரும் பக்தர்களுக்கு இதுவரை ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து ரூ.500 செலுத்தும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. இதற்காக நன்கொடையாளர்கள் முன் தினம் திருமலைக்கு சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து டிக்கெட் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நன்கொடையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அறிந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியிலேயே ஸ்ரீவாணி ஆப்லைன் டிக்கெட்டுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

special counter,tirupati ,சிறப்பு கவுண்டர், திருப்பதி

இதனால் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்கள் யாருடைய சிபாரிசு இல்லாமல் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்களை திருப்பதியிலேயே பெற்று இதே ஓய்வறையில் அறைகளை ஒதுக்கப்படுவதால் திருப்பதி ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் அருகே உள்ள மாதவம் ஓய்வறையில் தங்கி இருந்து அதிகாலையில் திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பக்தர்கள் வழங்கும் நன்கொடை மூலம் பழங்கால கோவில்களை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல், புதிய கோவில்கள் கட்டுதல், பஜனை மண்டபங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அறக்கட்டளை மூலம் தெலுங்கு மாநிலங்களில் முதற்கட்டமாக 502 கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. 2- ம் கட்டமாக சுமார் 1500 கோவில்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கும் பக்தர்கள் திருப்பதியில் உள்ள மாதவம் விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கவுன்டர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என அவர் கேட்டுக்கொண்டார்.

Tags :