Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • வேங்கராயன்குடிகாடு வில்லாயி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

வேங்கராயன்குடிகாடு வில்லாயி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

By: Nagaraj Sat, 22 July 2023 7:16:52 PM

வேங்கராயன்குடிகாடு வில்லாயி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள வில்லாயி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா சிறப்பாக நடந்தது.

ஆடி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அம்பாள் தவம் செய்த மாதம் என்பதால் ஆடி மாத செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், ஞாயிற்று கிழமைகளில் கூழ் ஊற்றப்படும் நிகழ்வும் நடத்தப்படுகின்றன. இதனால்தான் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்து வரப்படுகின்றது.

ஆடி மாதத்தை சக்தி மாதம் என்று அழைக்கின்றனர். ஜீவ ஆதார சக்தி அதிகமாக உள்ள முக்கிய மாதமாகவும் உள்ளது. இதனால், ஆடி மாதம் சக்தி நிறைந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடிப்பெருக்கு தினத்தில் நதியோரம் உள்ள கோயில்களில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். இதேபோல் சுமங்கலிப் பெண்கள் வழிபாடு நடத்தினால் அவர்களின் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

marriage ban,child blessing,mangalyam,worship ,திருமணத்தடை, குழந்தை பாக்கியம், மாங்கல்யம், வழிபாடு

ஆடி மாதம் பெண்களுக்கு உகந்த மாதம், அதே போல் ஆடிப்பூரம் என்பது பெண் தெய்வங்களுக்கு உகந்த நாள் என்பதால், அன்றைய தினம் பெண் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தஞ்சை அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் உள்ள வில்லாயி அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், 1008 வளையல் அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனை நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நீண்ட நாள் திருமண தடை, குழந்தை பாக்கியம், மாங்கல்ய தோஷ நிவர்த்திக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து வில்லாயி அம்மனை வழிபட்டனர்.

Tags :