Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பழநி முருகன் கோயிலில் அபிஷேக பஞ்சாமிர்தம் திடீரென விலை அதிகரிப்பு

பழநி முருகன் கோயிலில் அபிஷேக பஞ்சாமிர்தம் திடீரென விலை அதிகரிப்பு

By: vaithegi Mon, 18 Sept 2023 11:21:54 AM

பழநி முருகன் கோயிலில் அபிஷேக பஞ்சாமிர்தம் திடீரென விலை அதிகரிப்பு

பழநி ; பஞ்சாமிர்தம் ரூ.5 விலையேற்றம் ... திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அபிஷேக பஞ்சாமிர்தம் அரை கிலோ டப்பா ரூ.35-க்கும், டின் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே இதற்காக மலைக்கோயில் மற்றும் கிரி வீதி உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சாதாரண நாட்களில் தினமும் 20 ஆயிரம் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் விற்பனையாகும். திருவிழாக் காலங்களில் தினமும் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் டப்பாக்கள் வரை விற்பனையாகும்.

panchamirtam,palani murugan temple ,பஞ்சாமிர்தம் ,பழநி முருகன் கோயில்

இந்த நிலையில், எந்த வித முன்னறிவிப்பின்றி திடீரென பஞ்சாமிர்தம் விலை ரூ.5 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, 500 கிராம் பஞ்சாமிர்தம் டப்பா ரூ.35-ல் இருந்து ரூ.40-க்கும், ரூ.40 டின் ரூ.45-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உயர்த்தப்பட்ட விலையை டப்பாவில் அச்சிடாமல் , பேனாவால் எழுதி விற்பனை செய்கின்றனர். இந்த திடீர் விலையேற்றம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறுகையில், நெய் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலையேற்றத்தால் வேறு வழியின்றி பஞ்சாமிர்தம் விலை உயர்த்தப்பட்டுள்ளது, என்று அவர் கூறினர்.




Tags :