Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலங்களை பிரித்து பதிவுகளை மட்டும் நிறுத்த நடவடிக்கை

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலங்களை பிரித்து பதிவுகளை மட்டும் நிறுத்த நடவடிக்கை

By: Nagaraj Sun, 05 Mar 2023 2:00:38 PM

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலங்களை பிரித்து பதிவுகளை மட்டும் நிறுத்த நடவடிக்கை

திருப்பதி: தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலங்களை பிரித்து பதிவுகளை மட்டும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள அன்னமய பவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறியதாவது திருப்பதியில் வெங்கடாசலபதிக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான பதிவுகள் பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

நிலத்தைப் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என அரசுக்கு அனுப்பிய கடிதத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மற்றொரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலங்களை பிரித்து பதிவுகளை மட்டும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சில சர்வே எண்களில் உள்ள உட்பிரிவுகளின் விரிவாக்கம் மற்றும் நகல்களை சரிசெய்த பிறகு, மற்றொரு பட்டியல் அறக்கட்டளை ஆணையர் மூலம் பதிவுத்துறைக்கு வழங்கப்படும். திருப்பதி மண்டலத்தில் உள்ள பல்வேறு சர்வே எண்களில் பல்வேறு விரிவாக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.

another,government,lands,related, ,ஆணையர், கடிதம், நாடு, பக்தர்கள்

பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்க ஐ.ஜி.ஆர்.எஸ் வெப் சைட்டில் ஏற்பட்டுள்ள தவறுகள் சரி செய்யப்படும். நாடு முழுவதும் 7126.85 ஏக்கர் பரப்பளவில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான 960 அசையா சொத்துகளில் 690 சொத்துகள் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 6657.43 ஏக்கர் பரப்பளவில் உள்ளன. திருப்பதியிலேயே சுமார் 3663 ஏக்கர் உள்ளது. பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் கீழ் 584 ஏக்கர் நிலம் சர்ச்சையில் உள்ளது.

மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, திருத்தப்பட்ட பட்டியலை, உட்பிரிவுகளுடன், அறநிலையத்துறை ஆணையாளரிடம் சமர்ப்பிப்போம். திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான அசையா சொத்துக்களின் பட்டியல் மறுபரிசீலனை செய்யப்படும். என்று அவர் கூறினார்.

Tags :
|