Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ஆடி அமாவாசை.. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் நடை இன்று பகல் முழுவதும் திறந்திருக்கும்

ஆடி அமாவாசை.. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் நடை இன்று பகல் முழுவதும் திறந்திருக்கும்

By: vaithegi Mon, 17 July 2023 10:17:51 AM

ஆடி அமாவாசை..  ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் நடை இன்று பகல் முழுவதும் திறந்திருக்கும்

ராமேசுவரம்: இன்று முழுவதும் நடை திறப்பு .. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது ஆடி திருக்கல்யாண திருவிழா. இதையடுத்து இந்தாண்டுக்கான விழா ஜூலை 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை அடுத்து இன்று ஆடி அமாவாசையைமுன்னிட்டு ராமநாத சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். மேலும் காலை 9 மணியளவில் பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருள்வார்.

rameswaram ramanatha swamy temple walk,aadi amavasai ,ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் நடை ,ஆடி அமாவாசை

அதை தொடர்ந்து காலை 10.30 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ராமர், சீதா மற்றும் லட்சுமணர் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.மேலும் பகல் முழுவதும் நடை திறந்திருக்கும். அக்னி தீர்த்தக் கடற்கரையில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் விழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியாக ஜூலை 21-ம் தேதி தேரோட்டம், 23-ல் ஆடிதபசு, 24 -ல் திருக்கல்யாணம், ஜூவை 29-ம் தேதி கெந்தனமாதன பர்வதம் மண்டபகப்படிக்கு எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Tags :